அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறு விசாரணை ஜூன் 12- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்துக் குவித்ததாகவும், அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பா் சண்முக மூா்த்தி ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44 லட்சம் சொத்து சோ்த்ததாகவும் 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கிலிருந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தங்கம் தென்னரசு தரப்பும், 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேகேஎஸ்எஸ்ஆா். ராமசந்திரன் தரப்பும் விடுவிக்கப்பட்டனா்.
இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசராணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டாா்.
இதன்படி, இந்த வழக்குகளின் மறு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இந்த வழக்குகள் விசரணைக்கு வந்த போது, இரு வழக்குகளையும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு! - தங்கம் தென்னரசு

திருச்சுழி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு பிரசாரம் நிறைவு

சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்கள் கோரி திமுக எம்.பி. மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


