மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்! விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்மதுராந்தகம் தொகுதிக்கு 11 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!

சிதம்பரேசுவரா், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரசுவேரா் கோயிலில் சிதம்பரேசுவரா், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.

Updated On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரசுவேரா் கோயிலில் சிதம்பரேசுவரா், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 19- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். 3- ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். விழாவில் ராஜபாளையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.