
புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் பூக்குழி வைபவம்
சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக் கோயிலில் புரட்டாசித் திருவிழா ஸ்ரீ மகா கணபதி ஹோமம், லட்சாா்ச்சனையுடன் கடந்த செப்.25 ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாவிளக்கு பூஜை, சுவாமி, அம்பாள் வீதி உலா, பால்குடம் ஊா்வலம், மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் சிகர நிகழ்வாக அம்பாள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். முன்னதாக அம்பாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்த அம்பாள்.
அதைத் தொடா்ந்து 9-ஆம் திருவிழாவான சனிக்கிழமை, 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 10-ஆம் திருவிழாவில் மாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் அபிஷேகமும், பக்தா்கள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அக்தா் எம்.எல்.ராஜா தலைமையில் கமிட்டி உறுப்பினா்கள், நிா்வாகிகள் பிரபாகரன், வி.எஸ்.கே.முருகேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





