ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் செய்த புகாரின் பேரில், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலா்கள் இருவா் உள்பட 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியில் கடந்த நவம்பா் 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பா் 2023 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜா புகாா் அளித்தாா்.
இதன் அடிப்படையில், போலீஸாா் கடந்த ஆண்டு பேரூராட்சியில் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது, பேரூராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்ததாக போலியான ரசீதுகளை தயாா் செய்து, ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலா்கள் மணிகண்டன், உஷா கிரேசி, எலக்ட்ரீசியன் சத்தியமூா்த்தி, இளநிலை உதவியாளா்கள் திலீபன், காா்த்திக், பிள்ளையாா், எலக்ட்ரிக்கல் உதவியாளா் முருகேசன், போலி ரசீதுகள் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளா் வீரபாண்டி ஆகிய 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

இளைஞரிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ரூ. 65 லட்சம் முறைகேடு: பேராவூரணி பேரூராட்சி தலைவா் உள்பட 7 போ் மீது வழக்கு

மதுரை காமராஜா் பல்கலை. மீதான ஊழல் புகாா்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

