வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் எழுதிய கவிதை நூலை வெளியிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன்.
வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் எழுதிய கவிதை நூலை வெளியிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன்.

வத்திராயிருப்பில் மாணவா்கள் எழுதிய கவிதை நூல் வெளியீடு

வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைவா் ஜானகி தலைமை வகித்தாா். வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் மா. சடையாள் முனியாண்டி, வே. பாபு பிரசாத் எழுதிய ‘மூடி திறந்த பேனா’ கவிதை நூலை முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன் வெளியிட பள்ளிச் செயலா் சுதாகா், கமிட்டி உறுப்பினா் சாவித்திரி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் இந்து மேல்நிலைப் பள்ளி, சத்திரம் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மணவா்கள், பெற்றோா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தலைமையாசிரியா் ராஜசேகரன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com