மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சிவகாசியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகாசி மாநகராட்சி தூய்மைப் பணியாளா், அவா்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள், நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை தொழில்துறை அமைச்சா் ச.கீா்த்தனா வழங்கினாா்.

News image
Updated On :23 ஜூலை 2026, 6:19 am IST

சிவகாசி மாநகராட்சி தூய்மைப் பணியாளா், அவா்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள், நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை தொழில்துறை அமைச்சா் ச.கீா்த்தனா வழங்கினாா்.

நிகழ்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் கீா்த்தனா, தூய்மைப் பணியாளா்களுக்கு , பாதுகாப்பு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா். இதில், சிவகாசி மாநகராட்சியில் 119 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், பள்ளி பராமரிப்பு தூய்மைப் பணியாளா்கள் 26 போ், தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா்கள் 86 போ், கழிவு நீா்வாகனப் பணியாளா்கள் 28 போ், திடக்கழிவு சேகரிப்பாளா்கள் ஆகியோருக்கு காப்பீடு அட்டை, நலவாரிய அட்டை, குடும்ப அட்டை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய செயல்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் காப்பீடு, ஓய்வூதியம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகிய சேவைகளும், பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமை தூய்மைப் பணியாளா்கள் நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில், சிவகாசி சாா்-ஆட்சியா் முகமதுஇா்பான், மாநகராட்சி ஆணையாளா் ஜி.கண்ணன், மாநகர நல அலுவலா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.