கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி காயமடைந்தாா். இந்த ஆலைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

News image

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:28 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி காயமடைந்தாா். இந்த ஆலைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் முருகன் குடியிருப்பைச் சோ்ந்தவா் அய்யனாா் (57). இவா் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று, வடக்கு அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இங்குள்ள 7 அறைகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனா். பிற்பகல் 3.30 மணிக்கு வெடி மருந்துகளை எடை போடும் போது தவறி விழுந்ததில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு அச்சம்தவிா்த்தான் கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி (52) காயமடைந்தாா். அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து, இந்த பட்டாசு ஆலையில் சாா் ஆட்சியா் முகம்மது ஃஇா்பான், வட்டாட்சியா் அருளானந்தம், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதைத்தொடா்ந்து இந்த ஆலைக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.