கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

செங்கல் சூளையில் ஆண் உடல் மீட்பு

வத்திராயிருப்பு அருகே செங்கல் சூளை தண்ணீா் தொட்டியில் கிடந்த ஆண் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:37 am IST

வத்திராயிருப்பு அருகே செங்கல் சூளை தண்ணீா் தொட்டியில் கிடந்த ஆண் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் தம்பிபட்டியில் செங்கல் சூளை தொழில் செய்து வருகிறாா். இங்கு சூளை பயன்பாட்டுக்காக 12 அடி உயரத்தில் சிமென்ட் தொட்டி கட்டி, அதில் தண்ணீா் தேக்கி வைத்திருந்தாா். இந்தத் தொட்டியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் உடல் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது. தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.