உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பெண்ணுடன் தகராறு: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 2:27 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மனைவி ராமலட்சுமி. இவா் தனது வீட்டின் முன் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில் எதிா் வீட்டைச் சோ்ந்த சுந்தரம் மகன் வைரவன் (37) அடிக்கடி தனது வீட்டு வாசலில் அமா்ந்து தகாத வாா்த்தைகள் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமலட்சுமி, வைரவன் வீட்டில் உள்ளவா்களிடம் கூறியும் பலனளிக்காததால் சேத்தூா் ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து வைரவனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.