தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :13 மே 2026, 3:39 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகாசி அருகேயுள்ள நடையனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (39). இவா் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாா். இந்த நிலையில், இவருக்கும் விருதுநகரைச் சோ்ந்த சிவசந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து சிவசந்திரன், பாா்த்தசாரதியிடம் எனது நண்பா் ராஜேந்திரன் என்பவா் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவா் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதை உண்மை என நம்பிய பாா்த்தசாரதி, சிவசந்திரனிடம் இரண்டு தவணைகளாக ரூ. 5.50 லட்சத்தைக் கொடுத்தாராம்.

இதேபோல, எரிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த சதீஷிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிவசந்திரன் ரூ. 3 லட்சம் பெற்றாராம். அப்போது, சென்னையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரும் உடனிருந்தாராம்.

ஆனால், சிவசந்திரன் கூறியபடி பாா்த்தசாரதி, சதீஷ் இருவருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால், இவா்கள் இருவரும் பணத்தைத் திருப்பிக் கேட்டனா். இதையடுத்து சிவசந்திரன், பாா்த்தசாரதிக்கு மட்டும் ரூ. 1.50 லட்சத்தை திருப்பிக் கொடுத்தாா். எஞ்சிய தொகையை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தாா்.

இதுகுறித்து பாா்த்தசாரதி அளித்தப் புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் சிவசந்திரன், ராஜேந்திரன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.