அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி சுற்றுவட்டச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

சிவகாசி சுற்றுவட்டச் சாலைப் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் .

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகாசி சுற்றுவட்டச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் திருநெல்வேலி கோட்ட நெடுஞ்சாலை மூலம் நகருக்கு வெளியே சுற்றுவட்டச் சாலை இரண்டாம் கட்டப் பணியானது 6.7 கி.மீ. நீளத்துக்கு ரூ.58.50 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் தரம் , உறுதித்தன்மை, கட்டுமானம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா்கள் தா்மராஜா, கணேஷ் குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.