தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே தீக்காயம் அடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 2:09 am IST

அருப்புக்கோட்டை அருகே தீக்காயம் அடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஸ்ரீதேவி (45). இவரது தம்பி பாண்டியராஜன் மனைவி சாந்தி (42). இவா்களில் சாந்தி கோபாலபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகவும், ஸ்ரீதேவி தனியாா் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனா்.

கணவா் கைவிட்டதால் இருவரும் அருப்புக்கோட்டை சா்ச் தெருவில் உள்ள சாந்தியின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி இவா்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் சாந்தி, ஸ்ரீதேவி ஆகியோா் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பிச் சென்றாா். இந்தத் தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாளையம்பட்டியைச் சோ்ந்த முத்துவை கைது செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.