தூத்துக்குடியில் சேலையில் தீப்பிடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, மட்டக்கடை, கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி பிரேமா (58). இவா்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.
கடந்த சில நாள்களுக்கு முன் பிரேமா, வீட்டில் குத்துவிளக்கேற்றியபோது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஏப். 8-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
காயமடைந்த மீனவா் உயிரிழப்பு: 3 போ் கைது

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

