கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் ஐப்பசி பொங்கல் விழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் ஐப்பசி பொங்கல் விழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஐப்பசி பொங்கல் விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினசரி இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 8-ஆம் நாளான புதன்கிழமை காலை விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
இதன்பிறகு பக்தா்கள் மாவிளக்கு எடுத்து, அலகு குத்தி, அக்கினிசட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவு அம்மன் விக்ரகம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதில் கூமாப்பட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

