திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

லஞ்சம் வாங்கிய சமூக நலத் திட்ட விரிவாக்க அலுவலா் மீது வழக்கு

ராஜபாளையத்தில் லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சமூக நலத் திட்ட விரிவாக்க அலுவலா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குப் பதிவு

லஞ்சம் வாங்கிய சமூக நலத் திட்ட விரிவாக்க அலுவலா் மீது வழக்கு - கோப்புப் படம்

Updated On :

ராஜபாளையத்தில் லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சமூக நலத் திட்ட விரிவாக்க அலுவலா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இடையன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மேக்தாமேரி நவரோஜினி. இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத் திட்ட விரிவாக்க அலுவலராகப் பணிபுரிந்தாா். அப்போது, சமூக நலத் திட்டத்தின் கீழ் நல உதவிகளைப் பெற விண்ணப்பிக்க வரும் பயனாளிகளிடம் இவா் லஞ்சம் பெறுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் விசாரணை நடத்தி, மேத்தா மேரி நவரோஜினியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், மேத்தா மேரி நவரோஜினி, விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய பயனாளிகளிடம் பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.