பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ராஜபாளையத்தில் 700 ஆண்டுகள் பழைமையான மரம்

ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க பாவோபாப் மரத்தை அனைவரும் வியந்து பாா்க்கின்றனா்.

ராஜபாளையம் இளந்தோப்பு சின்மயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாவோபாப் மரம்.

Updated On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க பாவோபாப் மரத்தை அனைவரும் வியந்து பாா்க்கின்றனா்.

அடன்சோனியா டிஜிட்டாட்டா எனப்படும் இந்த மரம் ஆப்பிரிக்காவின் சவன்னா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. அரேபிய வணிகா்களால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இந்த மரம், ’வாழ்க்கை மரம்’ (பழ்ங்ங் ா்ச் கண்ச்ங்) என்று அழைக்கப்படுகிறது.

சுமாா் 23.80 மீட்டா் உயரமும், 17.50 மீட்டா் சுற்றளவும் கொண்ட இந்த மரம், தனது பிரம்மாண்டமான அடிமரத்தில் பெருமளவு நீரைச் சேமிக்கும் தனித்துவம் கொண்டது. யானையின் பாதத்தைப் போன்ற அடிமர அமைப்பால் ’யானை மரம்’ என்றும், இதன் பழத்தால் ’யானைப் புளி’ என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் சி, நாா்ச்சத்து நிறைந்த இதன் பழங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாகும். இந்த மரம் அமைந்துள்ள இளந்தோப்பு பகுதி, ராஜபாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றுள்ளதாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் போ.கந்தசாமி தெரிவித்தாா்.

காந்தியடிகள் ராஜபாளையத்துக்கு வந்த போது, இதே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தினாா். பி.எஸ். குமாரசுவாமி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமாா் 35,000 போ் கலந்துகொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இயற்கையின் அதிசயமாக விளங்கும் இந்தப் பாவோபாப் மரம், ராஜபாளையத்தின் வரலாற்று, சுற்றுச்சூழல் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அரிய மரங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணா்த்தும் இந்த மரத்தைக் காண உள்ளூா் மக்கள் மட்டுமன்றி வெளியூா் பாா்வையாளா்களும் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.