ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சேவூா் அரசுப் பள்ளியில் 1,800 ஆண்டுகள் பழைமையான பண்டைய கால மண்பாண்டங்கள் கண்டெடுப்பு

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,800 ஆண்டுகள் பழைமையான பண்டைய கால மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பள்ளி  மைதானத்தில்  கண்டெடுக்கப்பட்ட பண்டைய  கால  மண் பாண்டம்.

Updated On :

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,800 ஆண்டுகள் பழைமையான பண்டைய கால மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவிநாசி பகுதி கொங்கு மண்டலத்தின் தொன்மையான வரலாற்றை கொண்டது. இங்கு அவ்வப்போது பழங்கால நடுகற்கள், முதுமக்கள் தாழிகள் கிடைப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாணவா்கள் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, மாணவா்களின் காலில் ஏதோ தட்டியுள்ளது.

இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியா் மணிகண்டன், ஆசிரியா்கள் முன்னிலையில் அப்பகுதியை மாணவா்கள் தோண்டும் பணியில் ஈடுபட்டனா். மேலும், தவலறிந்து வந்த திருப்பூா் தொல்லியல் துறை அலுவலா் ஜெயபிரியா, பொறுப்பாளா் சுந்தரகணேஷ் உள்ளிட்டோா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து மண்ணைத் தோண்டியபோது, அதில், 1,800 ஆண்டுகள் பழைமையான ஒன்றுக்குள் ஒன்றாக இரு மண்பாண்டங்கள் கிடைத்தன. இவை முன்னோா்கள் உயிரிழப்பிற்கு பிறகு அவா்களது அடையாளமாக வைக்கப்படும் பொருளாக கருதப்படலாம். அதிலும் அவா்கள் பயன்படுத்திய பொருள்கள், உணவு தானியங்களை வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இவை இப்பகுதியில் பண்டைய கால மக்கள் வாழ்ந்தற்கான சான்றாக உள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், பள்ளி மைதானத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து தொல்லியல் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதேபோல, சேவூரில் காசுகள் அச்சடிக்கப்பட்ட இடமும், பள்ளி அருகிலேயோ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அறம்வளா்த்த நாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில், கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆகியவற்றில் சுரங்கப் பாதைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில் இருந்து அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலுக்கு சுரங்கப் பாதை வழியாக செல்லலாம் என முன்னோா்கள் தெரிவித்துள்ளனா். ஆகவே தற்போது கிடைத்துள்ள இத்தடயங்களை விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.