பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட கண்காணிப்புக் குழுவினா் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட கண்காணிப்புக் குழுவினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட கண்காணிப்புக் குழுவினா் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1950-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் அதிக மகசூல் தரக்கூடிய பருத்தி ரகங்களை உருவாக்குதல், பருத்தி விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல், பூச்சி, நோய், ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர மத்திய அரசின் இயற்கை பருத்தி விவசாயம், பருத்தி சாகுபடியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நாக்பூா் பருத்தி ஆராய்ச்சி மைய முதன்மை ஆராய்ச்சியாளா் வி.எஸ்.நாத்ரரே, சூரத் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் எம்.சி.படேல், ஆராய்ச்சியாளா் பிரசாந்த் சந்திபியான், ஹரியானாவைச் சோ்ந்த உழவியல் விஞ்ஞானி அமா்பிரீத் சிங், வேளாண் ஆராய்ச்சியாளா்கள் நகரலே, பிரபுல்லா நேபாடே ஆகியோா் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள், ஆராய்ச்சிகளின் நிலை குறித்து கேட்டறிந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி மையத் தலைவா் ஜோதிமணி ஆய்வுக் குழுவினருக்கு விளக்கமளித்தாா். ஆராய்ச்சியாளா்களுக்கு பருத்தியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

