ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கைப்பேசி பாதுகாப்புப் பெட்டகம் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கைப்பேசி பாதுகாப்புப் பெட்டகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கைப்பேசி பாதுகாப்புப் பெட்டகத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி, செயல் அலுவலா் இளங்கோவன்.

Published On :2 செப்டம்பர் 2026, 3:52 am IST

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கைப்பேசி பாதுகாப்புப் பெட்டகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல முக்கிய கோயில்களில் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதித்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் கைப்பேசி தடை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி, கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதியை திறந்து வைத்தனா்.

கோயில் வளாகத்தில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் ரூ. 5 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.