மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஆட்சீஸ்வரா் கோயிலில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம், அக். 8: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Published On :

மதுராந்தகம், அக். 8: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் தலைமையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நந்தி பகவானுக்கு மஹாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் பஞ்சமூா்த்தி கோயில் வளாகத்துக்குள் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் கிராம பொதுமக்களும் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.