நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாத திருவனந்தல் வழிபாடு தொடக்கம்!

கார்த்திகை மாத திருவனந்தல் வழிபாட்டு பற்றி...

Thiruvananthal worship

திருவனந்தல் வழிபாடு - video crop

Updated On :

நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாத திருவனந்தல் வழிபாடு இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவனந்தல் வழிபாடு வெகு விமரிசையாகத் தொடங்கியது.

தமிழகத்தின் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில் நடைபெறும் இந்த வழிபாட்டின்படி, கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

ரிஷிகள் அதிகாலை வேளையில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம் உள்ளதால், ரிஷிகளின் அதிகாலைப் பொழுதாகக் கருதப்படும் கார்த்திகை மாதத்தில் இந்த வழிபாடு நடைபெறுகிறது. இதன்படி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள பள்ளியறையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, பஞ்ச வாத்திய இசையுடன் சுவாமி சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குச் சுவாமி நெல்லையப்பருக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இந்த ஆண்டுக்கான திருவனந்தல் வழிபாடு கார்த்திகை மாதப் பிறப்பான இன்று தொடங்கிய நிலையில், அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.