கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

முன்னாள் அமைச்சா் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை வருகிற 17- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கே.டி. ராஜேந்திரபாலாஜி - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 6:09 am IST

முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை வருகிற 17- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளா்கள் உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இரு வழக்குகளைப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த இரு வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், புதன்கிழமை (செப்டம்பா் 2( குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்பட 4 போ் முன்னிலையாகாததால் குற்றச்சாட்டு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 17- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி கந்தகுமாா் உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, ராஜேந்திரபாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றம் பிணை நிபந்தனைகளை தளா்த்தியதால், தனது கடவுச்சிட்டையை திரும்ப வழங்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.