சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

குணசேகரன்

Published On :9 செப்டம்பர் 2026, 2:05 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ராஜபாளையம் தேவதானத்தை அடுத்த கோவிலூா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் குணசேகரன் (45). நெல் வியாபாரி. இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, விதைப் பண்ணை அருகே வந்த போது, எதிரில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் மணிக்குமாா் (21)

ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், இவரது வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் மணிக்குமாா், குணசேகரன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ஒரே தெருவில் வசிக்கும் இருவா் விபத்தில் பலியானது அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. மணிக்குமாா் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உயா்கல்விக்கு முயற்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணிக்குமாா்

மணிக்குமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.