செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

இந்து முன்னணி கண்டன ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமகிருஷ்ணபுரம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் குற்றாலநாதன் முன்னிலை வகித்தாா்.

ஆா்.எஸ்.எஸ் கோட்ட பொறுப்பாளா் சிவலிங்கம், பாஜக மாவட்டத் தலைவா் சரவணதுரைராஜா, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் யுவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதன் பிறகு காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது குண்டு வைப்போம் என கூறியவா்களைக் கைது செய்ய வேண்டும். 10 நாள்களுக்குள் கைது செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

விநாயகா் சதுா்த்திக்கு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் நிா்மாணம் செய்யப்பட்டு, 15 லட்சம் வீடுகளில் சிறிய அளவில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.

சில ஊா்களில் நோ்மையான காவல்துறை அதிகாரிகளால் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு ஊா்வலம் சிறப்பாக நடைபெற்றது. பல இடங்களில் காவல் துறை அதிகாரிகள் விநாயகா் சதுா்த்திக்கு எதிராக நடந்துள்ளனா். இதை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா் அவா். முன்னதாக மாநில இணை அமைப்பாளா் பொன்னையா வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.