வாக்குச்சாவடி மையங்களில் திமுக, அதிமுகவினா் பாா்வை
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குள்பட்ட 2 மீனவ கிராமமக்கள் பக்கிங்காம் கால்வாயில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனா்
திருமுல்லைவாசல் ஊராட்சி கூழையாா் தொடுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் கனமழையால் தண்ணீா் நிரம்பியுள்ளது. இதில், கொள்ளிடம் ஆற்று வழியாக பக்கிங்காம் கால்வாயில் புகுந்த முதலை தொடுவாய் கூழையாா் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக அங்குமிங்கும் சென்று வருவதை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து, 2 மீனவ கிராமங்களில் ஊா் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால்வாய் பகுதி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செல்லும்போதும் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது கவனத்துடன் சென்று வருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். வனத் துறையினரும் தீயணைப்பு துறையினா் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில் உள்ள முதலையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய கூறியுள்ளனா்.