கீழ்வேளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கீழ்வேளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க பாரபட்சமின்றி நடவடிக்கை கோரி சாலை மறியல்

கீழ்வேளூரில் குளத்தை மீட்பதில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழ்வேளூரில் குளத்தை மீட்பதில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் அருகேயுள்ள வடக்குவெளி நேரு நகா் பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குளத்தை மீட்டு, பொது பயன்பாட்டுக்குக் கொண்டுவர வருவாய்த் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வருவாய்த் துறையினா் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கீழ்வேளூா் கடைவீதியில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் சம்பந்தப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தி நடத்தி கலைத்தனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக, கீழ்வேளூா் வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு தற்காலிக தீா்வு காணப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com