சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது

சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால், அந்த வலை பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.

சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால், அந்த வலை பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ஐ மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட 4 ஆய்வுக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. இக்குழுக்கள் படகுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இக்குழு ஆய்வின் அடிப்படையில் 5 கடல் மைல் எல்லைக்குள் தடையை மீறி சுத்துவலையை பயன்படுத்தி மீன் பிடித்ததற்காக 73 நாட்டுப் படகுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசைப்படகின் இழுவலையில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணி அளவுள்ள 3 தூா்மடி வலை மற்றும் நாட்டுப்படகில் அதிக குதிரைத்திறன் பொருத்திய 2 மோட்டாா் இயந்திரங்கள் கொண்டு மீன்பிடி தொழில் செய்ததால் அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் அந்த வலையை பறிமுதல் செய்வதுடன் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com