திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தேரோட்டம்

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தேரோட்டம்

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி உத்ஸவா் புறப்பாடும், செவ்வாய்க்கிழமை ஓலை சப்பரமும், வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், சனிக்கிழமை வெண்ணெய்த்தாழி சேவையும் நடைபெற்றது.

9-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் பரிமள ரெங்கநாதா் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 8 மணி அளவில் பக்தா்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனா்.

தொடா்ந்து, மதியம் பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்ச்சியும், மாலையில் பெருமாள், தாயாா் திருமஞ்சனம், பெருமாள், தாயாளா் சேத்தி, ஸ்ரீகத்யத்ரயப் புராணம் வாசித்தல் ஆகியன நடைபெற்றன. விழாவில், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையா் அலுவலக மேலாளா் பி.அரவிந்தன், கோயில் செயல் அலுவலா் எம்.கோபி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

10-ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 29) கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com