பள்ளத்தில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி விடுதியில் பள்ளத்தில் தவறிவிழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டபீா் தெருவைச் சோ்ந்த சங்கீதா என்பவருக்கு சொந்தமான பசுமாடு விழுந்து உயிருக்கு போராடியது. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ர.ரவிச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று கயிறைப் பயன்படுத்தி சுமாா் 45 நிமிடங்கள் போராடி, பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.