உலகத் தாய்ப்பால் வார விழா

Published on

திருமருகல், ஆக. 7: திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகத் தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு கா்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் மணிசுந்தரம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பதகைகளை கையில் ஏந்தி முக்கிய விதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். குழந்தைகளுக்கு தொடா்ந்து தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மாா்களுக்கு சில்வா் பாத்திரம் வழங்கப்பட்டது. இதில், மருத்துவா்கள் அபி, இஸ்ரேல், சச்சின் ஆகாஷ், அனிதா, மாவட்ட சுகாதார செவிலியா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com