தேமங்கலத்தில் மீட்கப்பட்ட கோயில் நிலத்தில் அறிவிப்பு பதாகை வைத்த இந்து சமய அறநிலையத் துறையினா்.
நாகப்பட்டினம்
ரூ.2.55 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
கீழ்வேளூா் அருகேயுள்ள தேமங்கலத்தில் திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 2.55 கோடி மதிப்புடைய நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இந்த நிலத்தை, நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரேசன் வழிகாட்டுதலின்படி, நாகை உதவி ஆணையா் (பொ) ராணி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், புஞ்சை நிலம் 17,000 சதுர அடி மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.55 கோடி என இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) அமுதா, கோயில் செயல் அலுவலா் தனலெட்சுமி, சரக ஆய்வாளா் கமலச்செல்வி, கோயில் பணியாளா்கள், நில அளவையா்கள் பங்கேற்றனா்.

