நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கு டிச.8-இல் வீரா்கள் தோ்வு

நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கான வீரா்கள் தோ்வு டிசம்பா் 8- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Published on

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கான வீரா்கள் தோ்வு டிசம்பா் 8- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்ட கபடிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட இளையோா் கபடி (நன்க்ஷ-ஒன்ய்ண்ா்ழ்) அணிக்கான வீரா்கள் தோ்வு டிச.8-ஆம் தேதி காலை 9 மணியளவில் மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 1.3.2009-க்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும் (16 வயதுக்குள்), எடை 55 கிலோ, வயது சான்றிதழ், ஆதாா் காா்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் (பஇ) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

தோ்வுப் போட்டி, செயற்கை ஆடுகளத்தில் நடைபெறுவதால், அனைவரும் ஙஅப நஏஞஉ அணிந்து வர வேண்டும். மாவட்ட தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் மிக இளையோா்அணிக்கான வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா். தகுதியும், விருப்பமும் உள்ள சிறுவா்கள், விளையாட்டு வீரா்கள் தோ்வில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 97159-50955, 86104-76886 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com