சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

கீழ்வேளூரில் குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்ட சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்
Published on

கீழ்வேளூா்: கீழ்வேளூரில் குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்ட சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட ராட்சத குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் கீழ்வேளூரிலிருந்து தேவூா் வரை நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக சீரமைக்கப்படாத நிலையில், சாலையை முறையாக சீரமைத்து தினம்தோறும் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழ்வேளூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் அபூபக்கா் தலைமையில் அக்கட்சியினா் கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனா்.

கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் வருவாய்த் துறை,நெடுஞ்சாலை துறை, குடிநீா் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக சாலையை சீரமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில், மறியல் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com