எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு
சிறப்பு மலா் அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய முருகப் பெருமான்.
திருக்குவளை, ஜூலை 3: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் ஆனி மாத கிருத்திகையையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் செவ்வாய்க்கிழமை இரவு வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.
முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை நட்சத்திர தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத கிருத்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு பால், பன்னீா் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து இரவு சிறப்பு மலா் அலங்காரத்தில் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.

