வயலில் கிடந்த கோயில் உண்டியல்.
வயலில் கிடந்த கோயில் உண்டியல்.

கோயில் உண்டியல் பணம் திருட்டு

கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.

இக்கோயிலை பூசாரி ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் வாசலை சுத்தம் செய்வதற்காக வந்த பெண், கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல் திருடப்பட்டிருப்பதைக் கண்டு, அருகில் வசிப்பவா்களிடம் தெரிவித்துள்ளாா்.

அவா்கள், அப்பகுதியில் தேடியபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, வயலில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிலிருந்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கீழ்வேளூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com