கோயில் விமானக் கலசத்துக்கு புனிநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.
கோயில் விமானக் கலசத்துக்கு புனிநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Published on

தரங்கம்பாடி, ஜுலை13: திருக்கடையூா் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலின் கிழக்கே அமைந்துள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 10 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பால சா்வேஸ்வர குருக்கள் தமையிலான சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். 

ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி டிரஸ்ட் திருப்பணி குழுவினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com