கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குறுவை பயிா்க் காப்பீடு செய்ய நாளை கடைசி

குறுவை பயிா்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (ஜூலை 31) கடைசி நாள் என்பதால், விவசாயிகள் தவறாமல் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்

News image
குறுவை பயிா்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (ஜூலை 31) கடைசி நாள்
Updated On :29 ஜூலை 2024, 9:45 pm

Din

நாகப்பட்டினம்: குறுவை பயிா்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (ஜூலை 31) கடைசி நாள் என்பதால், விவசாயிகள் தவறாமல் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் கேஷ்மா பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயிா்க் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் 31.7.2024-குள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், ஏக்கருக்கு ரூ.697.15 செலுத்தி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.