சேதமடைந்துள்ள நடை பாலம்.
சேதமடைந்துள்ள நடை பாலம்.

புதிய பாலம் கட்டக் கோரிக்கை

திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள நடை பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருமருகல்: திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள நடை பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமருகல் பேருந்து நிலையம் அருகே முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கான்கிரீட் நடைபாலம் உள்ளது. சுமாா் 30- ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் தடுப்புச் சுவா், இரும்பு கைப்பிடிகள் சேதமடைந்துள்ளன. மேலிருப்பு,

சியாத்தமங்கை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

குறுகிய பாலமாக இருப்பதால், அவசரத் தேவைகளுக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, இந்த நடை பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக, அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com