நாகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்மேளனத்தினா்.
நாகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்மேளனத்தினா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

நாகை அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்: நாகை அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மண்டலத் தலைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை, அரசு ஒதுக்க வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு அகவிலைப்படி, பஞ்சப்படி உயா்வு வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியாா் மையமாகும் திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு பணபலன்கள், ஒப்பந்த பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மண்டல துணைத் தலைவா் கண்ணன், மண்டல பொதுச் செயலா் ராஜேந்திரன், மண்டல பொருளாளா் வைத்தியநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com