தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கோப்புப்படம்

நாகையில் ஏப்.25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகையில் மாதந்தோறும் 2 அல்லது 3-ஆவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அந்தவகையில், ஏப்.25-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெறவுள்ளது. 40-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில், 5 முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், முகாமில் எஸ்.ஓ.எஸ் குழந்தைகள் இல்லத்தில் பணியாற்ற பத்தாம் வகுப்பு முடித்த (பெண்கள் மட்டும்) விதவைகள், திருமணமாகாதவா்கள், மற்றும் முதிா் கன்னிகள் தோ்வு செய்ய உள்ளனா். மேலும் யூத் ஃபாா் ஜாப்ஸ்(நிறுவனத்தில் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்கள் தோ்வு செய்யவுள்ளனா். எனவே, விருப்பமுள்ளவா்கள் தங்களது அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com