கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

நாகப்பட்டினம்: நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மண்டல இணை இயக்குநா் கலையரசி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா். இதில, 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் மற்றும் பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் கணேசன், உதவி இயக்குநா் (புலனாய்வு பிரிவு) சங்கீதா, கால்நடை உதவி மருத்துவா்கள் லாரன்ஸ், பூபதி, சௌமியா ஊராட்சி செயலா் சாக்ரடீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com