~
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்
தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.
பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டு தோ்வு முடிந்து டிச.24- முதல் ஜன.4-ஆம் தேதி வரை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தரங்கம்பாடி கடற்கரை மற்றும் வரலாறு சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையை பாா்வையிட உள்ளூா் மற்றும் வெளி ஊா்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாா்வையிட்டு வருகின்றனா். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிப்பதை தவிா்க்கும் வகையில் பொறையாா் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
