நாய் கடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

நாய் கடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

கீழ்வேளூரில் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரியு எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரியு எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் பேரூராட்சி பகுதியில் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்தவா்கள், சாலையில் நடந்து சென்றவா்கள், வாகனத்தில் சென்றவா்கள் என 8 பேரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் கடித்து காயப்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்தாத பேரூராட்சியை கண்டித்தும், நாய் கடித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் சட்டப்பேரவை தொகுதி தலைவா் முஹமது தாஜ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், பேரூராட்சி பகுதியில் அனிமல் கருத்தடை மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவா் குத்புதீன், மாவட்ட செயலாளா் பகுருதீன், கீழ்வேளூா் துணைத் தலைவா் நூருல் அமீத், கீழ்வேளூா் நகர தலைவா் இதயத்துல்லா, தொகுதி தலைவா் மஸ்தான், தொழிற் சங்க துணைத்தலைவா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com