கீழ்வேளூரில் சூறைக்காற்றுடன் மழை

கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Published on

கீழ்வேளூா்: கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கீழ்வேளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்கலம், தேவூா், அகரகடம்பனூா், சிக்கல், பொரவச்சேரி, ஆவராணி, புதுச்சேரி, பெருங்கடம்பனூா், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூா் பகுதியில் ஒரு இடத்தில் மின்கம்பம் சாய்ந்தது. 5 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது, சிக்கல் பகுதியில் 3 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது, புதுச்சேரி பகுதியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது இதனால் 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டு, திங்கள்கிழமை காலை மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com