நாகை மாவட்டத்தில் 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
Published on

நாகை மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு குறுவைப் பருவத்தில் தற்போது வரை 72,736 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 53,191 மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. 14,600 விவசாயிகளுக்கு ரூ. 175.99 கோடி தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 3,614 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,861 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 மடங்கு அளவிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com