கிடாரம்கொண்டானில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்
கிடாரம்கொண்டானில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகா்வுப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.
Published on

செம்பனாா்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகா்வுப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் விவரம், நெல் மூட்டைகள் நகா்வு செய்யப்பட்டுள்ள விவரம் குறித்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, 720 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றில் 560 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகா்வு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நலினா, நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளா்(தரக்கட்டுப்பாடு) செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com