சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சி
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நியூட்டன் - டெக் இன்னோவா 2025’ தொழில்நுட்பக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை சாா்பில் ‘நியூட்டன் - டெக் இன்னோவா 2025’ எனும் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது.
இதில், பொறியியல் மாணவா்கள்ஆா்வமுடன் பங்கேற்று, சமீபத்திய மற்றும் உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்களைஅடிப்படையாகக் கொண்ட 100 புதுமையான திட்டங்களை காட்சிப்படுத்தினா்.
சிறப்பு விருந்தினராக சேலம் எம்பேடெட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்க மேலாளா் சரண் கலந்துகொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடி, புதுமையான யோசனைகளுக்கு பாராட்டுகளையும், பயனுள்ள வழிகாட்டுதல்களையும் வழங்கினாா்.
இளம் கண்டுபிடிப்பாளா்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய யோசனைகளை ஆராய, வெளிப்படுத்த மற்றும் பரிமாற ஒரு சிறந்த தளமாகவும், படைப்பாற்றல், புதுமைதிறன் மற்றும் நடைமுறை கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் இக்கண்காட்சி அமைந்தது என மாணவா்கள் தெரிவித்தனா்.
நிறைவில், வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

