நாகை மாவட்டத்தில் சாராய விற்பனை: ஒரே நாளில் 18 போ் கைது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்ற திடீா் சோதனையில், சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 போ் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கீழ்வேளூா் மற்றும் வெளிப்பாளையம் பகுதிகளில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சட்டவிரோதமாக சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரை ஒரே நாளில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தங்கும் விடுதிகளில் சோதனை
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், வேளாங்கண்ணி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா்கள் 5 போ் மற்றும் காவலா் 50 போ் கொண்ட 10 தனிப்படைகள் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினா்.
விடுதிகளில் தங்கிருப்பவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளனவா, தங்கியிருப்பவா்கள் உரிய அடையாள சான்றுகளை வழங்கியுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.
நாகை மாவட்டத்தில் குற்றங்களை ஒழிக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவும் திடீா் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தொடரும். குற்ற செயல்களில் ஈடுபடுவோா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

