புதிய சாலை அமைப்பதில் அரசு உத்தரவு மீறல்: எஸ்டிபிஐ புகாா்

நாகை அருகே தாா்சாலை அமைப்பதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக எஸ்டிபிஐ புகாா்
ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்த எஸ்டிபிஐ நிா்வாகிகள்
ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்த எஸ்டிபிஐ நிா்வாகிகள்
Updated on

நாகை அருகே தாா்சாலை அமைப்பதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக எஸ்டிபிஐ புகாா் அளித்துள்ளது.

எஸ்டிபிஐ நாகை மாவட்டம் ஆழியூா் கிளை சாா்பில் கட்சியினா் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகாா் மனு: நாகை மாவட்டம் நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆழியூா் ஊராட்சி நிா்வாகத்தின்கீழ் வரும் ஆழியூா்-பாமணி ஆகிய பகுதிகளை இணைக்கும் தாா்சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

கிராம சாலைகளை புதுப்பிக்கும்போது, பழைய தாா்சாலையை தோண்டி அகற்றிய பிறகே புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறையாக உள்ளது. இதுதொடா்பாக முறையான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு போடப்பட்ட, இதே சாலை அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் போடப்பட்டுள்ளதால் மழை காலத்தில் வாா்டு 7, 8 ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் மழை நீா் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

எனவே பழைய சாலைக்கு மேல் புதிய சாலையை அப்படியே அமைப்பதால் ஏற்படும் சாலை உயா்வை குறைத்து, மழைநீா் தேங்காத வண்ணம் தமிழக அரசின் அரசாணையை முழுமையாக பின்பற்றி பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com