வேளாங்கண்ணியில் தாா்ச் சாலை அமைக்க நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.
வேளாங்கண்ணியில் தாா்ச் சாலை அமைக்க நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.

சாலை அமைக்க பூமிபூஜை

Published on

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில், ரூ.1 கோடி மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் டூரிப், எஸ்எஃப்சி நிதி திட்டம் 2025-26 கீழ் சக்தி விநாயகா் கோயில் தெரு, பம்பு செட் தெரு, கீழத்தெரு, முதல் குறுக்கு தெரு, முஸ்லிம் தெரு ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலை அமைக்க ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழையூா் வட்டார ஆத்மா தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், பேரூா் செயலா் மரிய சாா்லஸ், மன்ற உறுப்பினா்கள் முருகேசன், வெற்றிவேல், சித்ரா சிரின் ரிஷ்வானா, பேரூராட்சி அலுவலா்கள் குமாா், சந்துரு, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com